இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

651ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ فَأَبْعَدُهُمْ مَمْشًى، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّي ثُمَّ يَنَامُ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களிலேயே தொழுகைக்காக அதிக நற்கூலியைப் பெறுபவர்கள், (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவிலிருந்து நடந்து வருபவர்களே! பிறகு அதற்கடுத்த தொலைவிலிருந்து வருபவர்கள். இமாமுடன் தொழுவதற்காகக் காத்திருப்பவர், (முன்கூட்டியே) தொழுதுவிட்டு உறங்குபவரை விட அதிக நற்கூலியைப் பெறுவார்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح