ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் ஓர் அறையை அமைத்துக்கொண்டார்கள். (அது பாயினால் ஆனதாக இருந்தது என்று அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் கூறினார்). அதில் அவர்கள் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களது தொழுகையைப் பின்பற்றி அவர்களின் தோழர்களில் சிலரும் தொழுதார்கள். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (வெளியே வராமல்) அமர்ந்திருந்தார்கள். பிறகு அவர்களிடம் வெளியே வந்து, "உங்கள் செயலில் நான் கண்டதை அறிந்துகொண்டேன். ஆகவே மக்களே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், கடமையான தொழுகைகளைத் தவிர, ஒரு மனிதர் தன் வீட்டில் தொழுவதே மிகச் சிறந்த தொழுகையாகும்" என்று கூறினார்கள்.