ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் ஒருவர் பள்ளிவாசலில் தொழுதால், அவர் தமது தொழுகையின் ஒரு பகுதியை தமது இல்லத்திற்காக ஒதுக்கிக் கொள்ளட்டும்; ஏனெனில், அல்லாஹ் அந்தத் தொழுகையை அவரது இல்லத்தில் ஒரு நலவழியாக ஆக்குவான்.