அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஃபஜ்ர் தொழுகையின்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் நீர் செய்த செயல்களில், (அல்லாஹ்வின் அருளை) மிக அதிகமாக நீர் எதிர்பார்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுவீராக! ஏனெனில், சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உமது காலடி ஓசையை நான் கேட்டேன்" என்று கேட்டார்கள்.
அதற்கு பிலால் (ரழி), "இரவிலோ பகலிலோ நான் எந்த நேரத்தில் தூய்மை (உளூ) செய்தாலும், அந்தத் தூய்மையைக் கொண்டு, எனக்கு (அல்லாஹ்வால்) தொழ விதிக்கப்பட்ட (நஃபிலான) தொழுகையைத் தொழாமல் இருந்ததில்லை என்பதைத் தவிர, (அல்லாஹ்வின் அருளை) அதிகம் எதிர்பார்க்கும் வேறு எந்தச் செயலையும் நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்கள்.
அபூ அப்துல்லாஹ் (இமாம் புகாரி) கூறினார்கள்: 'தஃப்ப நஃஅலைக்க' என்பது 'அசைவு' (தஹ்ரீக்) என்பதைக் குறிக்கிறது.