இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1097 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، - رضى الله عنه - قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قُمْنَا إِلَى الصَّلاَةِ ‏.‏ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً ‏.‏
ஜைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டோம். பிறகு நாங்கள் தொழுகைக்காக நின்றோம். நான் கேட்டேன்: இவ்விரண்டுக்கும் (அதாவது ஸஹர் உணவு உண்பதற்கும் தொழுகையை நிறைவேற்றுவதற்கும்) இடையே எவ்வளவு நேர இடைவெளி இருந்தது? அவர்கள் கூறினார்கள்: ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح