حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَىِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் நண்பரான நபி (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை அறிவுறுத்தினார்கள்: (1) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; (2) (முற்பகல் தொழுகையான) துஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துகளைத் தொழுவது; மற்றும் (3) தூங்குவதற்கு முன் வித்ர் தொழுவது.