மூஸா பின் தல்ஹா அவர்கள் கூறியதாவது:
"நான் அர்-ரபதாவில் வைத்து, அபூதர் (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மாதத்தில் ஏதேனும் நாட்களில் நோன்பு நோற்க விரும்பினால், பதிமூன்றாம், பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நாட்களில் நோன்பு நோற்பீர்களாக.'"