ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கில் வந்தால் (நான் என்ன செய்வது என்று) கூறுங்கள்?" எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், "உனது செல்வத்தை அவனிடம் கொடுக்காதே!" என்றார்கள். "அவன் என்னுடன் சண்டையிட்டால்?" என்று அவர் கேட்டார். "நீ அவனுடன் சண்டையிடு!" என்று அவர்கள் கூறினார்கள். "அவன் என்னைக் கொன்றுவிட்டால்?" என்று அவர் கேட்டார். "அப்போது நீ ஓர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவாய்" என்று அவர்கள் கூறினார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்?" என்று அவர் கேட்டார். "அவன் நரகில் இருப்பான்" என்று அவர்கள் கூறினார்கள்.