இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2551ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْمَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الْحَقِّ وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ، لَهُ أَجْرَانِ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தன் இறைவனைச் சிறந்த முறையில் வணங்கி, தன் எஜமானருக்கு அவர் மீதுள்ள உரிமைகளையும், (அவருக்கு) நன்மையை நாடி (நேர்மையுடனும்), கீழ்ப்படிதலுடனும் (தன் கடமைகளை) நிறைவேற்றும் அடிமைக்கு இரு மடங்கு நற்கூலி உண்டு.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح