அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலையில் உங்களில் ஒவ்வொருவரின் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். ஒவ்வொரு தஸ்பீஹும் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவது) ஒரு தர்மமாகும், ஒவ்வொரு தஹ்லீலும் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவது) ஒரு தர்மமாகும், ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) ஒரு தர்மமாகும், நன்மையை ஏவுவது ஒரு தர்மமாகும், தீமையைத் தடுப்பது ஒரு தர்மமாகும், மேலும், ஒருவர் முற்பகலில் (ளுஹா) தொழும் இரண்டு ரக்அத்கள் (இந்த தர்மங்கள் அனைத்திற்கும்) போதுமானதாகும்.