அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் மூவராக இருந்தால், நீங்கள் மக்களுடன் கலந்துவிடும் வரை உங்களில் இருவர் மற்றவரை (மூன்றாமவரை) விட்டுவிட்டு இரகசியமாகப் பேச வேண்டாம். ஏனெனில், அது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்.”