நாங்கள் (எங்கள் வீட்டு) முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்து எங்கள் அருகில் நின்றுகொண்டு, "பாதையோரங்களில் அமரும் இடங்களுடன் உங்களுக்கு என்ன வேலை? பாதையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு நாங்கள், "நாங்கள் எந்தத் தீங்கும் இழைப்பதற்காக அமரவில்லை; நாங்கள் (மார்க்க விஷயங்களை) நினைவூட்டிக் கொள்ளவும் பேசிக்கொள்ளவுமே அமர்ந்தோம்" என்று கூறினோம்.
அதற்கு அவர்கள், "(அமர்வதைத்) தவிர்க்க இயலவில்லை என்றால், அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். (அவை:) பார்வையைத் தாழ்த்துதல், ஸலாமுக்குப் பதிலளித்தல் மற்றும் நல்லதைப் பேசுதல் ஆகியனவாகும்" என்று கூறினார்கள்.