புரைதா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு (அதாவது ஜிஹாதுக்குச் செல்லாதவர்களுக்கு) முஜாஹித்களின் மனைவியரின் புனிதத்தன்மை, அவர்களுடைய தாய்மார்களின் புனிதத்தன்மையைப் போன்றதாகும். வீட்டில் தங்கியிருப்பவர்களில் ஒருவர், முஜாஹித் ஒருவரின் குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று, அதில் அவருக்குத் துரோகம் இழைத்தால், மறுமை நாளில் அந்த முஜாஹிதின் முன்னிலையில் அவர் நிறுத்தப்படுவார். அப்போது அந்த முஜாஹித், இவருடைய நற்செயல்களிலிருந்து தாம் விரும்பியதை எடுத்துக்கொள்வார். எனவே, (அவர் எதையேனும் மிச்சம் வைப்பார் என்று) நீங்கள் நினைக்கிறீர்களா?"