அலி இப்னு ரபீஆ அவர்கள் கூறினார்கள்: கூஃபாவில் முதன்முதலில் ஒப்பாரி வைக்கப்பட்டவர் கராழா இப்னு கஅப் (ரழி) அவர்களாவர். முஃகீரா இப்னு ஷுஅபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "யார் மீது ஒப்பாரி வைக்கப்படுகிறதோ, அவர் மீது ஒப்பாரி வைக்கப்பட்டதன் காரணமாக மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்."