உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் மிம்பரில் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் சகோதரர் ஆவார். ஆகவே, ஒரு முஃமின் தன் சகோதரரின் வியாபாரத்தின் மீது வியாபாரம் செய்வது ஆகுமானதல்ல; மேலும், தன் சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் அதை விட்டுவிடும் வரை இவர் பெண் பேசக் கூடாது."