அபூ ஸயீத் (ரழி) அவர்களும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கடைசி காலத்தில் ஒரு கலீஃபா இருப்பார் (தோன்றுவார்). அவர் செல்வத்தை பங்கிடுவார், ஆனால் அதனை எண்ண மாட்டார் (அதாவது, அதன் மிகுதி காரணமாகவோ அல்லது அவரது தாராள மனப்பான்மை காரணமாகவோ அதனை அளவிட மாட்டார்).