மிர்தாஸ் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நல்லடியார்கள் ஒருவர்பின் ஒருவராக (மரணித்துச்) சென்றுவிடுவார்கள். பார்லி அல்லது பேரீச்சம்பழத்தின் (பயனற்ற) கழிவைப் போன்று (சமுதாயத்திற்குப்) பயனற்றவர்கள் மட்டுமே எஞ்சி இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டான்.”
அபூ அப்துல்லாஹ் (இமாம் புகாரி) கூறினார்கள்: ‘ஹுஃபாலஹ்’ (حُفَالَةٌ) என்றும் ‘ஹுஸாலஹ்’ (حُثَالَةٌ) என்றும் சொல்லப்படும்.