அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாகச் சொர்க்கத்தில் ஒரு கடைவீதி உண்டு. அங்கு அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வருவார்கள். அப்போது வடக்கத்திய காற்று வீசும். அது அவர்களின் முகங்களிலும் அவர்களின் ஆடைகளிலும் (நறுமணத்தை) அள்ளி வீசும். அதனால் அவர்கள் அழகிலும் எழிலிலும் அதிகரித்துவிடுவார்கள். பிறகு அவர்கள் தங்கள் அழகிலும் எழிலிலும் அதிகரித்தவர்களாகத் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களின் குடும்பத்தார் அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் எங்களைவிட்டுச் சென்ற பிறகு அழகிலும் எழிலிலும் அதிகரித்துவிட்டீர்கள்' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள், 'நீங்களும்தான்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களுக்குப் பிறகு அழகிலும் எழிலிலும் அதிகரித்துவிட்டீர்கள்' என்று கூறுவார்கள்."