அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தாகத்தால் சாகும் நிலையில் இருந்த ஒரு நாய் ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த விபச்சாரிகளில் ஒருத்தி அதைத் திடீரெனப் பார்த்தாள். உடனே அவள் தனது காலணியைக் கழற்றி, அதைக் கொண்டு தண்ணீர் எடுத்து அதற்குப் புகட்டினாள். இதன் காரணமாக அவள் மன்னிக்கப்பட்டாள்."