அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "மக்களில் நான் அழகிய முறையில் தோழமை கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தந்தை" என்றார்கள்.
குதைபா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் "மக்கள்" என்ற சொல் இடம்பெறவில்லை.