حَدَّثَنَا ابْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَالْحَسَنِ بْنِ عَمْرٍو، وَفِطْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، - قَالَ سُفْيَانُ وَلَمْ يَرْفَعْهُ سُلَيْمَانُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ فِطْرٌ وَالْحَسَنُ - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِلَ هُوَ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
(சுஃப்யான் கூறினார்: அறிவிப்பாளர் சுலைமான் அவர்களின் அறிவிப்பு நபியவர்களிடம் சென்றடையவில்லை. ஃபித்ர் மற்றும் அல்-ஹசன் ஆகியோர் அவரிடமிருந்து இதை அறிவித்துள்ளனர்): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரதி உபகாரம் செய்பவர் உறவைப் பேணி வாழ்பவர் அல்லர்: மாறாக, உறவு துண்டிக்கப்படும்போது அதை இணைப்பவரே உறவைப் பேணி வாழ்பவர் ஆவார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பதிலுக்கு பதில் உறவைப் பேணுவது, உறவைப் பேணுவது ஆகாது. மாறாக, தன் இரத்த உறவு துண்டிக்கப்பட்டபோது அதை இணைப்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்.”
وعنه النبي صلى الله عليه وسلم قال: ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قَطَعت رحمُه وصلها ((رواه البخاري)).
அப்துல்லாஹ் பின் அம்ர் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தனது உறவினர்கள் தனக்கு நன்மை செய்வதால் பதிலுக்கு நன்மை செய்பவர், உறவுகளைப் பரிபூரணமாகப் பேணுபவர் அல்லர். மாறாக, உறவினர்கள் தம் உறவைத் துண்டித்துக்கொண்ட போதிலும், அவர்களுடன் விடாப்பிடியாக உறவைப் பேணுபவரே உறவுகளை உண்மையாகப் பேணுபவர் ஆவார்".