"'எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் தக்வாவைக் கடைப்பிடித்து, நன்மையைச் செய்தால், அவர்கள் (முன்பு) உண்டதில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை (5:93)' என வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் அவர்களில் ஒருவர்' என்று கூறினார்கள்."