இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1458ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا بَعَثَ مُعَاذًا ـ رضى الله عنه ـ عَلَى الْيَمَنِ قَالَ ‏ ‏ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ أَهْلِ كِتَابٍ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ، فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا فَعَلُوا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهُمْ زَكَاةً ‏{‏تُؤْخَذُ‏}‏ مِنْ أَمْوَالِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பியபோது அவரிடம் கூறினார்கள்: "நீங்கள் வேதக்கார சமூகத்தாரிடம் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம்) செல்கிறீர்கள். எனவே, முதன் முதலில் அவர்களை அல்லாஹ்வை வணங்குவதின் (ஏகத்துவத்தின்) பக்கம் அழையுங்கள். அவர்கள் அல்லாஹ்வை (ஏக இறைவனாக) அறிந்து கொண்டால், ஒவ்வொரு பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்கு அறிவியுங்கள். அவர்கள் அதைச் செயல்படுத்தினால், அல்லாஹ் அவர்கள் மீது ஜகாத்தைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்கு அறிவியுங்கள். அது அவர்களின் செல்வங்களிலிருந்து எடுக்கப்பட்டு, அவர்களிலுள்ள ஏழைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களிடமிருந்து (ஜகாத்தை) எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றை (அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
19 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، - وَهُوَ ابْنُ الْقَاسِمِ - عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ ‏ ‏ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ أَهْلِ كِتَابٍ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِهِمْ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பியபோது அவரிடம் கூறினார்கள்:
"நிச்சயமாக நீங்கள் வேதத்தையுடைய ஒரு சமூகத்தினரைச் சென்றடைவீர்கள். எனவே, நீங்கள் அவர்களை முதலில் அழைக்க வேண்டியது, மகிமையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்கே ஆகும். அவர்கள் அல்லாஹ்வை (ஏக இறைவனாக) அறிந்து கொண்டால், பகலிலும் இரவிலும் அவர்கள் மீது ஐந்து தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் அதைச் செயல்படுத்தினால், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஜகாத்தைக் கடமையாக்கியுள்ளான் என்பதையும், அது அவர்களிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும் என்பதையும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் அதற்குக் கட்டுப்பட்டால், அவர்களிடமிருந்து அதை வசூலித்துக் கொள்ளுங்கள்; மேலும் அவர்களின் செல்வங்களில் சிறந்தவற்றை (அவர்கள் மனமுவந்து கொடுக்காதவரை) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح