حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ أَحَدٌ ـ أَوْ لَيْسَ شَىْءٌ ـ أَصْبَرَ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، إِنَّهُمْ لَيَدْعُونَ لَهُ وَلَدًا، وَإِنَّهُ لَيُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தான் செவியுறும் தீங்கான சொல்லைப் பொறுத்துக்கொள்வதில் அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (அப்படியிருந்தும்) அவன் அவர்களுக்கு உடல்நலத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்."
அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் துன்பச் சொற்களைச் சகித்துக்கொள்வதில் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்கள்; அவனுக்குப் பிள்ளை உண்டெனக் கூறுகிறார்கள். ஆயினும் இதையெல்லாம் மீறி, அவன் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறான்; அவர்களுக்கு (வேண்டியவற்றைக்) கொடுக்கிறான்."