இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3880சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا انْتَبَهَ مِنَ اللَّيْلِ قَالَ ‏ ‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‏ ‏ ‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தூக்கத்திலிருந்து) விழித்ததும் கூறுவார்கள்: ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வ இலைஹின்னுஷூர் (எங்களை (தூக்கம் எனும்) மரணிக்கச் செய்த பின் எங்களுக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும், அவனிடமே (மறுமையில்) மீளெழுப்பப்படுதலும் இருக்கிறது).’
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)