இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2794சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَحَّى بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ يَذْبَحُ وَيُكَبِّرُ وَيُسَمِّي وَيَضَعُ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், கொம்புகளுள்ள, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிறமுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியும், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) கூறியும், தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டில் வைத்துத் தாமே அவற்றை அறுத்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)