அனஸ் பின் மாலிக் (ரழி) கூறினார்கள்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவிகளிடம் பெருமையடித்துக் கொள்வார்கள். (அவர்கள்) “நிச்சயமாக அல்லாஹ் (அஸ்ஸ வ ஜல்) வானத்திலிருந்து எனக்குத் திருமணம் செய்து வைத்தான்” என்று கூறுவார்கள். மேலும் அவர்களைப் பற்றியே ஹிஜாப் வசனம் அருளப்பட்டது.