وعن جرير بن عبد الله رضي الله عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر، وقال: إنكم سترون ربكم عياناً كما ترون هذا القمر، لا تضامون في رؤيته ((متفق عليه)). .
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் பௌர்ணமி இரவில் நிலவை உற்றுநோக்கிவிட்டு கூறினார்கள்: 'நிச்சயமாக நீங்கள் இந்த நிலவை (தெளிவாகக்) காண்பது போன்றே, உங்கள் இறைவனையும் கண்கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் நீங்கள் எந்த சிரமத்தையும் உணரமாட்டீர்கள் (அல்லது நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட மாட்டீர்கள்).'
(முத்தஃபகுன் அலைஹி)