அபூ கதாதா (ரழி) அவர்கள் இந்தச் செய்தியில் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) "நிச்சயமாக அல்லாஹ் (உறக்கத்தின் மூலம்) உங்கள் ஆன்மாக்களை எப்போது நாடினானோ அப்போது கைப்பற்றிக் கொண்டான்; மேலும் அவன் எப்போது நாடினானோ அப்போது அவற்றை உங்களிடம் திருப்பியளித்தான். ஆகவே நீர் எழுந்து தொழுகைக்கு 'அதான்' கூறுவீராக!" உடனே அவர்கள் (சஹாபாக்கள்) எழுந்து உளூச் செய்தார்கள். சூரியன் மேலே உயர்ந்ததும் நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) நின்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.