حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ وَقَالُوا حَبَّةٌ فِي شَعَرَةٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பனீ இஸ்ராயீல்களுக்கு, 'நீங்கள் இந்த வாசலில் ஸஜ்தா செய்தவர்களாக (அல்லது தலைவணங்கியவர்களாக) நுழையுங்கள்; மேலும் 'ஹித்தத்துன்' (எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!) என்று கூறுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்' என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் (அக்கட்டளையை) மாற்றிவிட்டு, தங்கள் புட்டங்களின் மீது ஊர்ந்தவாறு நுழைந்து, 'ஹப்பத்துன் ஃபீ ஷஅரா (ரோமத்தில் ஒரு தானியம்)' என்று கூறினார்கள்."