அல்கமா அவர்கள் அறிவித்தார்கள்: அஷ்அத் இப்னு கைஸ் (ரழி) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஆஷூரா தினத்தன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரிடம் சென்றார்கள்.
அப்போது அஷ்அத் இப்னு கைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே, இது ஆஷூரா நாள் (நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்).
அதற்கு இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (இந்த நாளில்) நோன்பு நோற்கப்பட்டு வந்தது; ஆனால் அது கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா தின நோன்பு) கைவிடப்பட்டது.
எனவே நீங்கள் நோன்பு நோற்கவில்லை என்றால், உணவு அருந்துங்கள்.