அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், 'வெண்ணூல் (அதாவது வைகறையின் ஒளி) கறுப்பு நூலிலிருந்து (அதாவது இரவின் கருமை) உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை' என்ற வசனத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'அது இரவின் கருமையும், பகலின் வெண்மையும் ஆகும்.'