நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்களிடம், "வல்லதீன யுதவஃப்பவ்ன மின்கும் வயதரூன அஸ்வாஜன்..." (திருக்குர்ஆன் 2:240) என்று தொடங்கும் வசனம் குறித்து, "இந்த வசனம் மற்றொரு வசனத்தால் மாற்றப்பட்டுவிட்டது. எனவே, தாங்கள் ஏன் இதை (குர்ஆனில்) எழுத வேண்டும்? அல்லது (அதில்) விட்டு வைக்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள், "என் சகோதரரின் மகனே! நான் அதிலிருந்து எதையும் அதன் இடத்திலிருந்து மாற்றமாட்டேன்" என்று கூறினார்கள்.