الثالث: عن ابن عباس رضي الله عنهما أيضاً قال: "حسبنا الله ونعم الوكيل، قالها إبراهيم صلى الله عليه وسلم حين ألقي في النار، وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا: إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا: حسبنا الله ونعم الوكيل: ((رواه البخاري)).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் கூறினார்கள்:
“ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்” (அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; அவனே சிறந்த பொறுப்பேற்பவன்).
இதை இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் வீசப்பட்டபோது கூறினார்கள். அவ்வாறே முஹம்மது (ஸல்) அவர்களிடமும், “(எதிரிகளான) மக்கள் உங்களுக்கெதிராகத் திரண்டு விட்டார்கள்; எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டபோது, (அந்தச் செய்தி) அவர்களின் ஈமானை (இறைநம்பிக்கையை) அதிகப்படுத்தியது. மேலும் அவர்கள், “ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்” என்று கூறினார்கள்.