இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

32ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ح‏.‏ قَالَ وَحَدَّثَنِي بِشْرٌ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ ‏{‏الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ‏}‏ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ ‏{‏إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ‏}‏‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லதீன ஆமனூ வலம் யல்பிஸூ ஈமானஹும் பிளுல்மின்” (யார் நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ...) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், “எங்களில் யார் தான் அநீதி இழைக்காதவர்?” என்று கேட்டார்கள். ஆகவே அல்லாஹ், “இன்னஷ் ஷிர்க்க லளுல்முன் அளீம்” (நிச்சயமாக இணைவைப்பு மகத்தான அநீதியாகும்) என்று அருளினான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3428ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ ‏{‏الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ‏}‏ قَالَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَنَزَلَتْ ‏{‏لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ‏}‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லதீன ஆமனூ வலம் யல்பிஸூ ஈமானஹும் பிளுல்ம்" (பொருள்: ‘எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஈமானை அநீதியுடன் கலக்கவில்லையோ...’) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் (அச்சத்துடன்), "எங்களில் யார் தம் ஈமானை அநீதியுடன் கலக்கவில்லை?" என்று கேட்டார்கள். அப்போது, "லா துஷ்ரிக் பில்லாஹி இன்னஷ் ஷிர்க்க லளுல்முன் அளீம்" (பொருள்: "அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதீர்; நிச்சயமாக இணை கற்பித்தல் மிகப் பெரும் அநீதியாகும்") என்ற வசனம் அருளப்பெற்றது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح