இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3945ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ‏.‏ ‏{‏يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى ‏{‏الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ ‏}‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (இவ்வசனத்தில் குறிப்பிடப்படும்) அவர்கள் வேதக்காரர்கள் ஆவர். (தங்களுக்கு அருளப்பட்ட) அதனைப் பல பகுதிகளாகப் பிரித்தார்கள். எனவே அதில் சிலவற்றை நம்பியும், வேறு சிலவற்றை நிராகரித்தும் விட்டார்கள். இதுவே, "அல்லதீன ஜஅலுல் குர்ஆன இளீன்" (அவர்கள் குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கினர்) எனும் அல்லாஹு தஆலாவின் சொல்லின் (விளக்கமாகும்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح