இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6523ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَجُلاً، قَالَ يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ قَالَ ‏ ‏ أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنَّ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏‏.‏ قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நிராகரிப்பவன் (மறுமையில்) எவ்வாறு தன் முகத்தால் ஒன்று திரட்டப்படுவான்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் அவனைத் தன் கால்களால் நடக்கச் செய்தவன், மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்யவும் ஆற்றலுள்ளவன் அல்லவா?" என்று பதிலளித்தார்கள். (கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆம்! நம்முடைய இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக!)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2806ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا يُونُسُ،
بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ
يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ ‏ ‏ أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى رِجْلَيْهِ فِي الدُّنْيَا
قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏ ‏.‏ قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் இறைமறுப்பாளன் எவ்வாறு தன் முகத்தின் மீது (நடத்தப்பட்டு) ஒன்றுதிரட்டப்படுவான்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் அவனைக் கால்களால் நடக்கச் செய்தவன், மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்யவும் ஆற்றலுள்ளவன் அல்லவா?" என்று கூறினார்கள்.
கதாதா அவர்கள், "ஆம்! எங்கள் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக!" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح