இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3613ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي مُوسَى بْنُ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ، فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ‏.‏ فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ مُنَكِّسًا رَأْسَهُ، فَقَالَ مَا شَأْنُكَ فَقَالَ شَرٌّ، كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَدْ حَبِطَ عَمَلُهُ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ‏.‏ فَأَتَى الرَّجُلُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا‏.‏ فَقَالَ مُوسَى بْنُ أَنَسٍ فَرَجَعَ الْمَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ، فَقَالَ ‏ ‏ اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنْ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், தாபித் பின் கைஸ் (ரழி) அவர்களைக் காணாததைக் கவனித்தார்கள். ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் உங்களுக்கு அவரைப் பற்றிய செய்தியை அறிந்து வருகிறேன்" என்று கூறினார். எனவே அவர் (தாபித் (ரழி) அவர்களிடம்) சென்று, அவர் தனது வீட்டில் தலையைக் கவிழ்ந்த வண்ணம் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் தாபித் (ரழி) அவர்களிடம், "உமது விஷயம் என்ன?" என்று கேட்டார். தாபித் (ரழி) அவர்கள், "கெடுதிதான்; (நான் செய்த தவறு என்னவென்றால்,) (இவர்) நபி (ஸல்) அவர்களின் குரலை விட தன் குரலை உயர்த்திப் பேசி வந்தார்; அதனால் இவரின் நல்லறம் அழிந்துவிட்டது; மேலும் இவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்" என்று (தம்மைப் பற்றிக்) கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று, தாபித் (ரழி) அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். (துணை அறிவிப்பாளர் மூஸா பின் அனஸ் கூறினார்கள்: "அந்த மனிதர் மீண்டும் மாபெரும் நற்செய்தியுடன் சென்றார்".) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (அந்த மனிதரிடம்), "நீர் அவரிடம் சென்று, 'நிச்சயமாக நீர் நரகவாசிகளில் ஒருவர் அல்லர்; மாறாக சொர்க்கவாசிகளில் ஒருவர்' என்று கூறுவீராக" எனக் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح