இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3345ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ ‏{‏فَهَلْ مِنْ مُدَّكِرٍ ‏}‏‏.‏
அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத்) (ரழி) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் "ஃபஹல் மின் முத்தகிர்" (அல்குர்ஆன் 54:15, 17, 22, 32, 40) என்று ஓதுவதை நான் கேட்டேன்' என்று கூற நான் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4869ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ ‏{‏فَهَلْ مِنْ مُدَّكِرٍ‏}‏
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் "{ஃபஹல் மின் முத்தகிர்}" (நல்லுபதேசம் பெறுவோர் உண்டா?) என்று ஓதுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4873ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَرَأَ ‏{‏فَهَلْ مِنْ مُدَّكِرٍ‏، ولقد أهلكنا أشياعكم فهل من مُدَّكِرٍ‏}‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "ஃபஹல் மின் முத்தகிர்" என்றும், "வலகத் அஹ்லக்னா அஷ்யாஅக்கும் ஃபஹல் மின் முத்தகிர்" என்றும் ஓதினார்கள். (இதன் பொருள்: "திண்ணமாக, உங்களைப் போன்ற (பாவம் செய்த) சமூகத்தாரை நாம் அழித்திருக்கிறோம்; ஆகவே, அறிவுரை பெறுவோர் (எவரேனும்) உண்டா?")
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح