இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7444ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வெள்ளியால் ஆன இரண்டு சுவனங்கள்; அவற்றின் பாத்திரங்களும் மற்றும் அவற்றிலுள்ளவைகளும் (வெள்ளியால் ஆனவையே). தங்கத்தால் ஆன இரண்டு சுவனங்கள்; அவற்றின் பாத்திரங்களும் மற்றும் அவற்றிலுள்ளவைகளும் (தங்கத்தால் ஆனவையே). 'அத்ன்' எனும் சுவனத்தில் மக்கள் தங்கள் இறைவனைப் பார்ப்பதற்கும் அவர்களுக்குமிடையே, அவனது திருமுகத்தின் மீதுள்ள (அவனது) மகத்துவம் (மற்றும் கம்பீரம்) எனும் மேலாடையைத் தவிர வேறெதுவும் (தடையாக) இருக்காது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
180ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَأَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الصَّمَدِ، - وَاللَّفْظُ لأَبِي غَسَّانَ قَالَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ، - حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ‏ ‏ ‏.‏
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(சொர்க்கத்தில்) இரண்டு தோட்டங்கள் இருக்கும்; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ளவையும் வெள்ளியால் ஆனவையாக இருக்கும். மேலும் இரண்டு தோட்டங்கள் இருக்கும்; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ளவையும் தங்கத்தால் ஆனவையாக இருக்கும். ‘ஜன்னத்துல் அத்ன்’ எனும் சொர்க்கத்தில் (நம்பிக்கையாளர்கள்) தங்கள் இறைவனைப் பார்ப்பதற்குத் தடையாக இருப்பது, அவனது திருமுகத்தின் மீதிருக்கும் மகத்துவம் எனும் மேலங்கி மட்டுமேயாகும்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
186சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ تَبَارَكَ وَتَعَالَى إِلاَّ رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ‏ ‏ ‏.‏
அபூமூஸா அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரண்டு சுவனச் சோலைகள் வெள்ளியால் ஆனவை; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ள அனைத்தும் (வெள்ளியால் ஆனவையே). மேலும் இரண்டு சுவனச் சோலைகள் தங்கத்தால் ஆனவை; அவற்றின் பாத்திரங்களும் அவற்றில் உள்ள அனைத்தும் (தங்கத்தால் ஆனவையே). மக்களுக்கும், பாக்கியமிக்கவனும் உயர்ந்தவனுமாகிய தங்கள் இறைவனைப் பார்ப்பதற்கும் இடையில், ‘அத்ன்’ எனும் சுவனச் சோலையில், அவனது திருமுகத்தின் மீதிருக்கும் பெருமை எனும் மேலாடையைத் தவிர வேறு எதுவும் இருக்காது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)