இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4955ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّالِحَةُ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ ‏{‏اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ‏}‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இறைச்செய்தி அருளப்படுவதற்கு) முதலில் ஆரம்பிக்கப்பட்டது நற்கனவுகள் ஆகும். பின்னர் வானவர் அவர்களிடம் வந்து, “இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக். கலக்கல் இன்ஸான மின் அலக். இக்ரஃ வரப்புகல் அக்ரம்” (படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி) என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح