தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவது குறித்து அவர்கள் (நபித்தோழர்கள்) பேசிக்கொண்டார்கள். அப்போது, நெருப்பு மூட்டப்பட வேண்டும் என்றோ அல்லது மணி அடிக்கப்பட வேண்டும் என்றோ அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே, அதானை (பாங்கு) இரட்டைப்படையாகவும், இகாமத்தை ஒற்றைப்படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.