அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவு உணவு (உண்ண) கொண்டுவரப்பட்டு, தொழுகையின் நேரம் வந்துவிட்டால், மஃரிப் தொழுகையைத் தொழுவதற்கு முன் அதனுடன் (உணவுடன்) தொடங்குங்கள்; உங்கள் உணவை (முடித்துக்கொள்வதில்) அவசரப்படாதீர்கள்."