இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

871ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا‏.‏
அனஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் (இமாமாக) தொழுதார்கள். நானும் ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் (ஜமாஅத்தாகத் தொழுவதற்காக) நின்றோம். உம்மு சுலைம் (ரழி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
874ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் தொழுதார்கள். அப்போது நானும், ஒரு அனாதையும் அவருக்குப் பின்னால் (ஒரு வரிசையாக) நின்றோம். உம்மு சுலைம் (ரழி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (தனியாக ஒரு வரிசையில்) நின்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
869சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَنَسًا، - رضى الله عنه - قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِنَا فَصَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ لَنَا خَلْفَهُ وَصَلَّتْ أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நானும், எங்களிடம் இருந்த ஓர் அநாதைச் சிறுவனும் அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். எங்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)