இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

902சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ - رضى الله عنهما - يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِـ ‏{‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏}‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் (தொழுகையில்) தங்களுடைய ஓதுதலை, 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதைக் கொண்டு தொடங்குவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
782சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ ‏{‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏}‏ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரும் (தொழுகையில்) ஓதுதலை “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று தொடங்குவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
813சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، ح وَحَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ ‏{الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் ‘எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்)’ என்பதைக் கொண்டு (தங்களின் தொழுகையில்) ஓதுதலை ஆரம்பிப்பார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)