அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையில் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, இவ்விரண்டும் ஒரே நேரத்தில் அமைந்தால், அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் 'ஆமீன்' கூறும்போது, வானத்தில் உள்ள வானவர்களும் 'ஆமீன்' கூறுகிறார்கள். உங்களில் ஒருவரின் 'ஆமீன்' கூறும் நேரமும், வானவர்களின் 'ஆமீன்' கூறும் நேரமும் (அல்லது அவர்களின் ஆமீன் கூறும் முறைமையும்) ஒருமிக்கும்போது, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு) ‘ஆமீன்’ என்று கூறும்போது, வானத்தில் உள்ள வானவர்களும் ‘ஆமீன்’ என்று கூறுகிறார்கள். அவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போனால், அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.”
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் 'ஆமீன்' என்று கூறும்போது (இமாம் அல்-ஃபாத்திஹாவை முடித்த பிறகு), வானத்தில் உள்ள வானவர்களும் 'ஆமீன்' என்று கூற, அவ்விரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகுமானால், அவரின் முன்சென்ற பாவங்கள் (சிறு பாவங்கள்) அவருக்கு மன்னிக்கப்படுகின்றன."