அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் தொழுகையில் அமரும்போது சம்மணமிட்டு அமர்வதை நான் கண்டேன். ஆகவே, நானும் அவ்வாறே செய்தேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். அப்துல்லாஹ் (பின் உமர்) அவர்கள் என்னைத் தடுத்துவிட்டு, "வலது காலை நட்டு வைப்பதும், இடது காலை மடக்கி வைப்பதுமே தொழுகையின் வழிமுறையாகும் (சுன்னத்)" என்று கூறினார்கள்.
அதற்கு நான் அவரிடம், "நீங்களும் அவ்வாறு செய்கிறீர்களே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் கால்கள் (அந்த நிலையில்) என்னைத் தாங்குவதில்லை (என்னால் அவ்வாறு அமர முடிவதில்லை)" என்று கூறினார்கள்.