அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் கடமையான தொழுகைகளுக்குப் பிறகு உரத்தக் குரலில் திக்ர் (அல்லாஹ்வின் பெயரை குறிப்பிடுதல்) செய்வது (ஒரு பொதுவான நடைமுறையாக) இருந்தது; மேலும் நான் அதைக் கேட்டபோது, அவர்கள் (மக்கள்) தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் கடமையான தொழுகையை முடித்தப் பிறகு, அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக சப்தத்தை உயர்த்துவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அதைக் கொண்டு அறிந்துகொள்வேன்; மேலும் அதை (அல்லாஹ்வை திக்ரு செய்வதை) நான் செவியேற்பேன்.