أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، أَنَّ أُمَّ سَلَمَةَ، أَخْبَرَتْهَا أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الصَّلاَةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ الرِّجَالُ .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், பெண்கள் தொழுகையில் (இறுதி) சலாம் கொடுத்ததும் (தமது இடத்திலிருந்து) எழுந்துவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் தொழுத ஆண்களும் அல்லாஹ் நாடிய காலம் வரை (தமது தொழுகை இடத்திலேயே) நிலைத்திருப்பார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும், ஆண்களும் எழுந்துவிடுவார்கள்.