حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நானும் ஓர் அனாதையும் (சேர்ந்து) எங்கள் வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். என் தாயார் உம்மு சுலைம் எங்களுக்குப் பின்னால் (நின்று) தொழுதார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் தொழுதார்கள். அப்போது நானும், ஒரு அனாதையும் அவருக்குப் பின்னால் (ஒரு வரிசையாக) நின்றோம். உம்மு சுலைம் (ரழி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (தனியாக ஒரு வரிசையில்) நின்றார்கள்.